பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் எனப்பாடுவர். பொதுவாக அக்காலப் புலவர்கள் மறம் கடிந்து அறம்காத்த காரணத்தால் அவர் வாய்வழி அரும் பும் புகழுக்கு அவனி காவலர் ஏங்கினர் என்பதற்கு எண் ணற்ற சான்றுகள் உள. இப்புலவர் பெருமக்களும் இவ் வாறு பல்வேறு அறநெறிகளைப் பொதுப்படவும் தனிவகை யிலும் பல மன்னரை முன்னிறுத்திக் காட்டி விளக்கி அவ ரையும் நாட்டையும் மொழியையும் பண்பாட்டையும் பிற நல்லியல்புகளையும் வாழவைத்துள்ளனர். இதுவரையில் பல ரையும் முன்னிறுத்திப் பொதுவாகக் கூறிய அறவகைகளைக் கண்டோம். இனித் தனித்தனி ஒவ்வொரு மன்னனையும் முன்னுக்கி நேருக்குநேர் அறம் கூறி, அவ்வறத்தைப் பின் பொது நிலையாக்கிய புலவர் வாய்ச் சொற்களில் ஒரு சில: காணலாம் என அமைகின்றேன். நாடாளும் மன்னவரே நாட்டு நலன் அனைத்துக்கும் பொறுப்பாளி. அவர் கோடின் அனைத்தும் கோடும், மன் னனையே உலகம் உயிராக உடையது. உடல் ஒம்பலின்றேல் உயிர் வாழ்வில்லை. இதைப் பொதுவாக அரசர்மேல் ஏற்றிய மோசிகீரனுர், நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதல்ை, யான் உயி ரென்ப தறிகை வேன்மிகு தானே வேந்தற்குக் கடனே (புறம். 186) எனப் பாடுகின்ருர். இப்புலவர் தம் முந்திய பாட்டோடு தொடர்புள்ள இப்பொதுப்பாடலை இங்கே கண்டு, பின் தனிப்பட்டவரை முன்னிறுத்திய பாடல்களைக் காணலாம். ஆய், கொடை வள்ளல். ஆனல் கொடுத்தலை அவன் பண்டமாற்ருகச் செய்யவில்லை; அறத்தை விலை கூறவில்லை. உண்மையில் அறஞ்செய்வோர் இயல்பே இதுதான். ஆண்ட வனைப் பாடிய அப்பரடிகள் என் கடன் பணி செய்து கிடப் பதே என்ற அளவில் தொண்டு செய்தாரேயன்றி அத்