பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் டான். . இவர் பெயருக்கு அமைச்சர் என்று பதவி வகிக்க வில்லை. பாண்டிய மன்னனுக்கு இவர் வருமுன்னமேயே பலர் அமைச்சர்களாக இருந்தனர்; எனினும் இவர் அறிவும் ஆற்றலும் அறிந்த மன்னன், இவரை வலிய அழைத்து அமைச்சராக்கினன். இவர் தம் திறனும் செயலும் சிறக்க நின்ற காரணத்தால் முதல் அமைச்சர் பதவியை எளிதில் பெற்றுயர்ந்தார். அமைச்சரில் முதன்மை பெற்ற வாதவூரர் தம்மை மறந்த அடியவருள்ளும் முதன்மையுற்று விளங், கினர். - அரசனுக்கு உற்ற அமைச்சராகப் பணியாற்றியபோதும் மணிவாசகர் ஆண்டவனிடத்தில் இடையருத அன்பு செலுத்தி வந்தார். தமக்கென நெருங்கிய சுற்றத்தார் ஒரு வரும் இன்மையின், அரச காரியங்களைக் கவனித்தது. போக, மற்ற வேளைகளில் ஆண்டவன் திருப்பணிகளிலேயே சிந்தை வைத்திருந்தார். அத்திருப்பணியின் காரணமாக அரச காரியங்களுக்கு இடையூறு நேருவண்ணம் தம் கடமை களை ஒழுங்காகச் செய்துவந்தார். அதேைலயே அவர் அரச னுக்கு உற்றவராக இருக்க முடிந்தது. அந்த நிலையில்தான் குதிரை வாங்கி வரப் பெருந்துறைக்குச் செல்ல நேர்ந்தது. அக்காலத்தில் பாண்டிய நாட்டின் பெரிய துறைமுகமாக இருந்த காரணத்தினலேயே அவ்வூர் பெருந்துறை எனப் பட்டது போலும். பிறகு நடந்த கதை அனைத்தும் நாடறிந் தனவே. எனவே இங்கே நான் அவைபற்றி விளக்க வேண்டா. ஒன்றை மட்டும் கூறி மேலே செல்கிறேன். பெருந் துறையில் அவர் கட்டிய கோயில் பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தால் ஆயது என்ற ஒன்றை மட்டும் நான் மறுப்பது கடமையாம். அவரது சொந்தப் பணத்திலேயே அக்கோயில் எழுப்பப்பட்டது. அது பற்றிய விளக்கம் ஈண்டைக்குத் தேவை இல்லை. ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுவேன். அறநெறியும் தெய்வ நலமும் பொருந் திய பாண்டிய மன்னன் மணிவாசகரின் புகழ் கண்டு பொருமை உற்றமையாலேயே எல்லாக் கொடுமைகளும்