பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

29




பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி

பெண்கள் என்றும் கும்மியே அடித்துக் கொண்டிருந்தார்களா என்றால் இல்லை. குரல் விம்மிவிம்மி காலமெல்லாம் பெண்கள் ஏங்கியதால், சோகத்தில் கண்களெல்லாம் வீங்கிக் கொண்டிருந்தன. பெண்மை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த ஏக்கத்தின் துக்கத்தை மாற்றக்கூடிய விடிவெள்ளியாக ஆயிரம் ஆயிரம் பெரியார்கள் பெண்மையின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்தப் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் நம்முடைய முதல்வராகத் திகழும் புரட்சித்தலைவி அவர்கள் விளங்குகிறார்கள். அவர் நம் நாட்டில் உள்ள வறட்சியை, மிரட்சியை, மக்கள் அயர்ச்சியை, மயர்ச்சியை, தளர்ச்சியைப் போக்கி, ஒளிர்ச்சியை மிளிர்ச்சியை, மலர்ச்சியை, மகிழ்ச்சியை ஊட்டிப் பெண்மைக்கு இலக்கணமாகத் திகழ்பவர்; நம் இனத்தைச் சார்ந்தவர்.

பெண்களைப் பூட்டி வைத்த நிலையை எண்ணிய பாரதியார்.

“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்றார். அக்கனவு நனவாகும் வகையில் அந்தக் காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யக்கூடிய பெண்களின் ஆற்றலை உணர்ந்துள்ளனர் மக்கள்.

ஐயிரண்டு திங்களாய், மெய்யதனிலே காத்து, கையிரண்டிலே ஈன்றெடுத்து, கனியமுதாய் பிறந்து வளர்ந்து மிளிர்ந்து போற்றும் வண்ணம் வாழ்ந்து, இத்தரணி மீதினில்வ—2