பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

53


நிறுவனத்தின் இன்றைய பெருமையை, சிறப்பை எப்பொழுதும் உணர்ந்து பார்க்க வேண்டும். நானும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றுள்ள அனைவரும் நாங்கள் பயின்ற பச்சையப்பன் கல்லூரியைப் பற்றி என்றும் பெருமையோடு எண்ணிப் பார்ப்போம், 'அர்னால்டு பேராசிரியர் அணி' என்று இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வார்கள். அது போல நீங்களும் ‘வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள்' என்று சொல்வதில் பெருமைப்படவேண்டும். அதுதான் உங்களுக்கு எல்லையில்லாப் புகழைத் தேடித் தரும்; துணிவையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும்.

ஒரு பெண் தன்னந்தனியாகப் பிறந்தவர், விடுதலைப் போராட்டத்திற்காகத் திங்களுக்கு இரண்டு முறை தந்தை சிறையில் இருந்ததால் தந்தையின் அரவணைப்பைப் பெற முடியாதவர், தாய் காசநோயால் அவதிப்பட்டு சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததால் தாயின் அன்பைப் பெற முடியாதவர். அதனால் இயல்பிலேயே அச்சமும், கூச்ச சுபாவமும் பெற்றிருந்த அந்தப் பெண் கல்கத்தா மகளிர் கல்லூரியில் பயின்ற போது பலரோடும் பழகும் வாய்ப்பினைப் பெற்று, தன் தாயினைக் காண, தனியாகவே சுவிட்சர்லாந்திற்குப் பறந்து செல்லும் துணிவைப் பெற்று, உலகமே புகழும் பாரதப் பிரதமராக அன்னை இந்திராகாந்தியாக உருவாகினார் என்றால் அதற்கு அவர் பயின்ற கல்வி நிறுவனமே காரணமாகும்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்னை வள்ளியம்மையின் சிலை திறப்பு விழா நடைபெறப் போகிறது. நீங்கள் அனைவரும் அந்த அம்மையின் வாரிசுகளாக உருவாகிப் புகழ் பெறுவீர்கள் என்பதில் எந்த ஐயமும்