பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

57


என்பது பற்றி நினைவுக்கு வருகிறது. அதாவது ஒருவன் இரவு உறங்கச் செல்லும் போது உறங்குவதற்கு முன்பு இன்று வரை தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து, நாளை காலை முதல் நல்லவனாய் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி செயல்படுவானானால் வாழ்க்கையில் நன்னிலை அடையலாம் என்பதை நான் இங்கு எடுத்துக்காட்ட விழைகிறேன்.

ஐயாவுடைய இந்நூலைப் படித்தோம் என்றால் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு என்று எல்லா நூல்களின் கருத்துக்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளதைப் பார்க்கும்போது அவருடைய நுண்ணறிவு நன்கு புலப்படும். அவர் எங்களுக்குக் கல்லூரியில் பாடம் பயிற்றுவிக்கும்போது ஒரு வகுப்பிலேயே குறைந்தது 30 மேற்கோள்களாவது எடுத்துக் காட்டிக் கருத்துக்களை விளக்குவார், இததகைய சிறப்புடைய ஐயா அவர்கள், மகளிர் கல்லூரி ஒன்றை உருவாக்கி, பெண்கள் அறிவு பரந்து பட்டதாக அமையப் பாடுபட்டு வருகிறார். ஐயா தொட்டது எல்லாம் துலங்கும். இங்கு எனக்கு முன்பு பேசிய துணைவேந்தர் வெள்ளிவிழாக் காணும் இக்கல்வி அறம் ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக ஆகட்டும் என்று வாழ்த்தினார். ஆனால் நான் அப் பல்கலைக்கழகத்தை வளர்க்க ஐயா அவர்களை நீண்ட நெடுங்காலம் நலத்தோடும், வளத்தோடும் வாழட்டும் என்று இறைவனை வேண்டி என் உரையை முடித்துக் கொள்கிறேன், ஆசானுக்கு வணக்கங்கள்! நன்றி. வணக்கம்!