பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

59


மொழி உச்சரிப்போ இப்பொழுது இல்லையே என்று வருத்தப்பட்டார். இதே குறையைச் சுட்டிக்காட்டிப் பல இடங்களிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இக்குறையை எம் நிலையங்கள், ஐயா நிறுவியுள்ளது போன்ற கல்வி நிலையங்கள் முயற்சி செய்து நிவர்த்தி செய்யலாம்.

நூலைப் பற்றி ஒரு கருத்தைக் கூற விழைகிறேன். அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் சான்றோர் வாக்குகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட அந்நிறுவனங்களே பாடுபடும். நானும் அங்கிருந்து பாடுபட்டவன். அத்தகைய வசதிகள், நிறுவனங்கள் இங்கு இல்லை . 15 ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் நான் பணியாற்றி வந்த போதும் இல்லை. இப்பொழுது ஒருவேளை இத்தகைய வசதிகள் ஏற்பட்டிருக்கலாம். இங்குள்ள சான்றோர்களின் உரை காற்றோடு காற்றாக கலந்து போகாத வண்ணம் நாமும் சிறந்த நிறுவனங்களை ஏற்படுத்திச் செயலாற்ற வேண்டும். அவ்வகையில் ஐயா அவர்கள் செய்த தொண்டு மாபெருந்தொண்டாகும். இது தமிழ் உலகத்திற்கு ஒருபெரும் பேறாகும். இதுபோல இன்னும் தமிழ்மொழியில் வர வேண்டும் என்று கூறி என் ஆசான் முன்பு எப்படி என்னை வாழ்த்தினாரோ அப்படியே இப்பொழுதும் வாழ்த்தும்படி வேண்டி என் உரையை நிறைவு செய்கிறேன், வணக்கம்!