பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

61


ஏற்படுத்தக் கூடாது என்று செயல்படுத்தினால், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பெறமுடியாது. 1993-இல் இன்றைய மக்கள் தொகையின்படி அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை . கி. பி. 2020 இல் மக்கட் தொகை இரண்டு மடங்கு ஆகும். அப்போது அன்றைய தேவையை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இன்றைய தினம் நம்மால் கொள்ள முடியவில்லை. இதை மனத்தில் வைத்துப் பார்க்கும் போது. சென்னை மாநகரத்தில் கூட இன்றைக்கு உள்ள பள்ளிக்கூடம் கல்லூரியைப் போல இரண்டு மடங்கு தேவை என்பதைப் பற்றிப் பேசுகிறோம். 2000 என்பது வெகு தூரத்தில் இல்லை, ஆகவே தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனம் ஏற்படவும் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கவும். அரசாங்கத்தினாலேயே முடியாதபோது தனியார் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரும் இந்நேரத்தில் ஆதரவு தருவதும், பரிவு கொள்வதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பல்வேறு அறக்கட்டளைகளைக் கல்வி நிறுவனங்கள் தொடங்கும் இந்நேரத்தில் நாம் முறையாக பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய அனுமதி தந்து வருகின்றோம். இரண்டாவது காரணம் பக்கத்திலேயே அரசு பார்வையில் நடைபெறும் கல்வி நிறுவனம் இருந்தாலும், பெற்றோர்கள், தனியார் பொறுப்பில் உள்ள பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றார்கள். ஏனெனில் தரமான கல்வியைத் தனியார் கல்வி நிறுவனத்தால் தர முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்றது. அதிலே ஓரளவிற்கு உண்மையும் இருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தனியார் துறையில் நிறையக் கல்வி நிறுவனங்கள் தொடங்க வேண்டிய அவசியம் இந்நிலையில் நிறைய இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குழந்தைகளுக்குக் கல்வியைத்