பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

வள்ளியம்மாள் கல்வி அறம்


யும், இகழையும், புகழையும் ஒன்றாகக் காண்பவனே சிறந்த ஞானியாக முடியும்.

“புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்று மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தினையும் அடக்குவதே வீரம் என்கிறார் ஔவையார்.

அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கிக் கயிலை மலையிலே ஐந்து மாதங்கள் ஒரு காலிலே நின்று தவம் செய்தான், தேவர்களுக்கும் எட்டாத முழுமுதற் கடவுளாகிய சிவனிடத்தில் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான். இன்று வரை இந்த அஸ்திரத்தைச் சிவனிடத்தில் பெற்றவன் அர்ச்சுனன் ஒருவனே. இந்திரலோகத்தில், இந்திரன் தன் பகைவர்களை அர்ச்சுனன் மூலம் வெல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நேரத்தில், நாராயணனின் தொடையில் பிறந்தவளான ஊர்வசி தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டபோதும் அருச்சுனன் அவளைத் தன் தாயாகவே கருதினானேயன்றி வேறுவிதமாக நினைக்கவில்லை. இதிலிருந்து அவனுடைய புலனடக்கம் புலப்படுகின்றது.

புலனடக்கம் உடையவர்கள் தவநெறியில் வாழ்கின்றவர்கள், இத்தகைய தவநெறியில் வாழ்கின்றவர்களுக்கு அருள்புரிபவன் முருகப்பெருமான் ஆவான். முருகன் மெய்ஞ்ஞான பண்டிதன்,

திருமூலர்,

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்'

என்று கூறுகிறார்.

கச்சியப்ப சிவாச்சாரியாரும்,