பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வள்ளியம்மாள் கல்வி அறம்



தத்தாத்திரிக்கு ஆறு கை
அக்னி பகவானுக்கு ஏழு கை
பிரம்மாவுக்கு எட்டு கை
சிவனுக்குப் பத்து கை
முருகனுக்குப் பன்னிரண்டு கை

நாம் நம் இரண்டு கைகளால் வணங்கினால் முருகனின் பன்னிரு கைகளால் நமக்கு அருள்கிட்டும்.

எம்பெருமான் முருகன் சரவணப் பொய்கையில் அடுக்குத் தாமரையில் தோன்றியவன்,வள்ளுவர்,

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

என்று கூறியுள்ளார். மலர் என்பது நம் இதயக் கமலத்தைக் குறிக்கிறது. ஆண்டவன் நம் இதயக் கமலத்தில் வீற்றிருக்கின்றான்.

முருகப்பெருமான் ஒவ்வோர் ஆன்மாவையும் உய்விக்கும் பொருட்டு நம் இதயத்தில் வீற்றிருக்கின்றான். நாமனைவரும் உடம்பாகிய சிறையில் ஆட்பட்டிருக்கின்றோம். முருகனின் கருணை அச்சிறையிலிருந்து மீட்சி பெறச் செய்கிறது. பாம்பன் சுவாமிகள் , “கந்தக் கடவுளைப் போல் எந்தக் கடவுளுமில்லை " என்பார்.

அந்த ஆறுமுகனின் கருணையினைப் பெற்று, தேர்வுகளில் வெற்றி அடைந்து, பிள்ளைகளாகிய நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளைப் பெற்று, வளமான வாழ்வோடு, நல்ல நிதான புத்தியோடு, கூர்த்த அறிவோடு, நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்று சொல்லி நீங்களனைவரும் எதிரி காலத்தில் நல்ல பதவியைப் பெற வாழ்த்துகிறேன். இதைக் கண்டு உங்கள் ஸ்தாபகர் வெகு மகிழ்ச்சி அடைவார். வள்ளியம்மையின் பெயராலே இக்கல்வி அறம் அமைந்துள்ளது. வள்ளிக்கும், ஞான சம்பந்தருக்கும் அதிகத்-