பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வள்ளியம்மாள் கல்வி அறம்


கருத்துக்களை இங்கே கூறினார்கள். பெண்களை இழிவு படுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும் அது தடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதை மிக அழகாக அர்த்தத்தோடு எடுத்துச் சொன்னார்கள்.

“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று பாடிய பாரதி ஓர் ஆண் மகன் தான். ஆகவே பெண்மையைப் பற்றிப் பாடுகின்றவர்கள் அந்தப் பெண்மை உயர வேண்டும் என்பதில் வேறுவிதமான கருத்துக்களைக் கொண்டவர்கள் அல்லர். பெண்மை என்பதும், ஆண்மை என்பதும் இருபாலாருக்கும் சொந்தம் என்று நான் கருதுகின்றேன். பெண்மையில்லாத ஆண்மையும், ஆண்மையில்லாத பெண்மையும் உலகத்திற்கே உகந்தவை அல்ல. எவனிடத்தில் அன்பும், பண்பும், பணிவும் இருக்கின்றதோ அவன் வாழ்க்கையில் உயருவான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை வரவேற்போம்.

அச்சுறுத்தி வாழ்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தமிழ்ச் சமுதாயம் அதை வரவேற்பதில்லை. அன்பின் வடிவம் தான் பெண்மை. அன்பின் வடிவமாகத்தான் பெண்ணை வணங்குகின்றோமேயன்றி அச்சுறுத்துகிறாள் என்கின்ற நிலைமையில் பெண்ணை வணங்குவதில்லை. தாயை வாழ்த்துகின்றோமென்றால் அந்த இதயத்தில் இருக்கின்ற அன்பை வாழ்த்துகின்றோம். அருளை வாழ்த்துகின்றோம். ஆகவே அச்சுறுத்தி வணங்க வைப்பதில்லை பெண்மை. பெண்கள் எம்பொழுதுமே தவறு செய்தது கிடையாது.

இன்றைக்குக் கூட இந்த அருமையான கல்லூரியில் வருகின்ற அத்தனை பெண்களும் நம்முடைய கலாச்சாரத்தை