பக்கம்:வெள்ளை யானை.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


口

கவிஞர் முருகுசுந்தரத்தின் வெள்ளை யானை' ஒரு நெடுங்கவிதை, ஒரு குறுங்காவியம்: பழந் தொன்மத்தின் புது விளக்கம்; நிகழ்கால மதிப்பு களின் வெளிச்சத்தில் பழந்தொன்மம் பற்றிய ஒரு விசாரணை, புதுக்கவிதைகள் மரபாகிக் கொண்டு வரும்பொழுது, ஒரு பழந்தொன்மத்தைப் புதுக் கவிதையாக்கியுள்ளார் கவிஞர்.

நெடுங்கவிதைகள் பெருமூச்க போல் ஆயாசம் தருவன. ஆனால் இந்தக் காவியம் நெருக்கித் தொடுத்த பூச்சரங்களால் கட்டப்பட்ட நிலைமாலை போல் கவர்ச்சியும் அழகும் நிறைந்தது. சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணி வகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக் கவிதை இது.

다.

டாக்டர் பாலா