பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாம்பணியும், கைகளில் ஏந்திய மான், மழு, திரிசூலம் இவைகளே தட்டுப்படுகின்றன. இவற்றைத் தெரிந்த உடன் நரஹரி சேரனார் கண்களை அவிழ்த்துப்பார்க்கிறார். அங்கு பழைய பாண்டுரங்கனே நிற்கிறார். கைகளுக்கு தட்டுப் பட்ட பரமசிவனைக் காணோம். உண்மை விளங்குகிறது நரஹரி சேரனாருக்கு, விஷ்ணு வேறு சிவன் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்று. இந்த இரு கதைகளும் விளக்கும் உண்மை நமக்கும் விளங்குகிறது. இப்போது பக்தர்களுக்குள்ளே எத்தனை தான் சண்டையிருந்தாலும், இந்த சிவனும் விஷ்ணுவும் யாதொரு பேதமும் இல்லாமல் ஒருவரில் ஒருவர் இணைந்து நிற்கும் இயல்பு பெற்றவர்களாகிறார்கள். இப்படி இணைந்து நிற்கும் திருக்கோலத்தை தானே சங்கர நாராயணர் என்னும் ஹரிஹரன் என்றும் பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஆழ்வார்கள் பாடியிருக்கிறார். அரன் காரணன் நாமம் ; ஆன் விடை புள் ஊர்தி : உரைநூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் கார் மேனிஒன்று என்று பொய்கை ஆழ்வார் பாடியது இந்த சங்கரநாராயண வடிவத்தைக் கண்டுதானே.இன்னும் பேயாழ்வார் தெய்வத் திருமாலை சென்று வேங்கடவாணனைக் கண் குளிரக் கண்டு தரிசித்த பின் இப்படி சிவனும் விஷ்ணுவும் இணைந்து நிற்கும் கோலத்தையே கண்டிருக்கிறார். அப்படி அவர் பெற்ற அனுபவத்தையே தாழ்சடையும் கீள் முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நானும்