பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அசுரன் இருந்திருக்கிறான். அவனுக்கு ஒரு தங்கை அசமுகி என்று. அவள் எப்படியோ துர்வாசமுனிவரை மயக்கி அவரை மணந்திருக்கிறாள். துர்வாசருக்கும் அசமுகிக்கும் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவன் வா த பி மற்றொருவன் வில்வலன். இந்த அண்ணன் தம்பியர் இரு வரும் முனிவர்களை அழிக்க ஒருவழி கண்டு பிடித்திருக் கின்றனர். முதலில் வாதாபி ஆடாக மாறுவான். வில்வலன் அந்த ஆட்டைக் கறி சமைத்து முனிவர் ஒருவரை விருந் தினராக அழைத்து அவருக்கு விருந்து அருத்துவான். பின்னர் வில்வலன் மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தை ஜபித்து வாதாபியை அழைப்பான். வாதாபியும் தன் சுய உருவம் பெற்று முனிவரது வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து விடுவான். அகஸ்தியர் அந்த வாதாபி வில்வலன் இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார். வில்வலன் அவரிடமும் அந்தப் பழைய கைவரிசையைக் காட்டியிருக் கிறான். ஆனால் வயிற்றினுள் சென்ற வாதாபியை வில்வலன் அழைக்கவும் விஷயம் உணர்ந்த அகத்தியர் வயிற்றைத் தடவி அந்த வாதாபியை அப்படியே ஜீரணித்து விடுகிறார். பின்னர் அவன் வேண்டிக் கொண்ட படியே அந்தப் பிரதேசத்தில் வாதாபியின் பெயராலேயே அழைத்திருக்கிறார். வாதாபி இன்று சிறிய ஊராகவே இருக்கிறது. அது ஒரு காலத்தில் சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் தலைநகராம் என்று சொல்லக்கூடிய சின்னங்கள் ஒன்றுமே இல்லை. அகஸ்தியர் குண்டத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் இரண்டு மலைகள். வ ட பக் கம் உள்ள மலைமேலே ஒரு கோயில், அந்த மலைமேலே ஏறுவது மிகச் சிரமமாக இருக்கும். நல்ல படிக்கட்டுக்கள் இல்லை. அங்குள்ள கோயிலை மலிகட்டி சிவாலயம் என்கின்றனர். இது பெரிய கோயில் அல்ல. கோயிலின் நீளமே ஐம்பது அடி தான். கோயிலில் கருவறை, சபாமண்டபம், முன் மண்ட யம் என்று மூன்று பகுதியாக இருக்கிறது. மண்டபத்து