பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 கோயில்களையும் அனுமார் கோயில்களையும் காணலாம். மகாராஷ்டிர மக்களிடையே கணபதிக்கு அடுத்தபடி பிரா தான்யம் பெற்றிருப்பவர் ஆஞ்சனேயர்தாம். இப்படியே உங்களை சுற்றி சுற்றியடிக்க விரும்ா வில்லை. இவ்வூருக்குத் தென்மேற்குப்பக்கத்திலேயே உள்ள ஒருசிறுமலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அந்த மலை கடல்மட்டத்திற்கு மேல் 260 அடி உயரமே உள்ள சின்னமலைதான். அந்த மலை ஏற நல்ல வசதி யானபடிக்கட்டுக்கள் க ட் டி யி ரு க் கி ற |ா ரீ க ள். .ெ ம. ச. த் தம் ஏறவேண்டியதெல்லாம் 108-படிகளே. இந்த ம ைல ைய பார்வதிமலை என்கின்றனர். பர்வதத்தின் மேல் உறைபவர்தானே பார்வதி. ஆதியில் இம்மலையில் பார்வதி என்னும் பேர் கொண்ட தேவியின் கோயில் இருந்திருக்கிறது. அதைக் அக்காட்டிலுள்ள வேடர்கள் ஆராதித்து வந்திருக்கிறார்கள். பின்னர் அக் கோயிலுக்கு ஒரு பூசாரி ஏற்பட்டிருக்கிறான். அவன் தினமும் மலை ஏறி தேவியின் பூஜையை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறான். அச்சமயத்தில் அம்மலையின் பக்கத் தில் வாழ்ந்து வந்த நாநா சாகிப் பீஷ்வாவின் தாயார் காசிபாய் அம்மையார் ஒரு கடும் வியாதியால் கஷ்டப் பட்டுக்கொண்டு இருந்திருக்கின்றாள். நா.நா சாகிப் பீஷ்வாவின் மனைவி தன் மாமியாருக்காக பார்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார். காசிபாய் அம்மையாரும் நோய் நீங்கி குணம் பெற்றிருக்கிறார். இதன் பின்னர் நாநா சாகிப் பீஷ்வாவே, 10 லட்சம் ரூபாய் செலவில் மலையின் மீது கோயில்கள் எல்லாம் கட்டியிருக் கிறார். நாமும் மலை ஏறி அக்கோயில்களுக்குச் சென்று வருவோமே. மலைமீது ஏறியவுடன் ஒரு சிறு மண்டபத்தில் பாண்டுரங்க விட்டலனும் ருக்மிணி தேவியும் நமக்குத் தரிசனம் தருவர். அவர்களை வணங்கிவிட்டு வடபக்கம் உள்ள படிகளை ஏறிக்கடந்து சென்றால் ஒரு பெரிய கோயில் முற்றத்திற்கு வந்து சேருவோம். அங்கே இருப்பவர்தான் தேவதேவன். லிங்க உருவினர் அவர். 3738-12