பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 செல்லலாம். சென்னையிலிருந்து ரயிலில் செல்வது வசதியாக இருக்கும். சென்னையிலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ்' என்ற ரயில்கள் எல்லாம் சென்று சேருமிடம் விக்டோரியா டெர்மினஸ் என்ற பெரியதொரு ஸ்டேஷன். ஆனால் நாம் நமது தமிழ் அன்பர்கள் வசிக்கும் பகுதியான மாதுங்காவிற்குத் தானே செல்ல விரும்புவோம். ஆதலால் தாதர் என்ற ஸ்டேஷனிலேயே இறங்கி விடலாம். மாதுங்காவில் நண்பர்கள் இருந்தால் அவர்களிடமே தங்கலாம். இல்லாவிட்டால் சியான் பகுதியில் பம்பாய்த் தமிழர்கள நாலு லட்சம் ரூபாய் செலவில் கட்டி வைத்திருக்கும் பம்பாய் தமிழ்ச்சங்க கட்டிடத்திலேயே தங்கலாம். அங்கிருந்து பம்பாய் நகரத்தில் உள்ள பகுதி களுக்கும் காரிலோ அல்லது பஸ்ஸிலோ செல்லலாம். இனி நாம் பம்பாயில் உள்ள முக்கியமான இடங்களையும் கோயில்களையும் சுற்றிப் பார்க்கலாம். பம்பாய் நகரம் ஒரு சிறு தீவில்தான் இருக்கிறது. தீவையும் பிரதான நிலப்பரப்புடன் இ ைண த் து விட்டிருப்பதால் தீவு என்றே தெரியாது. தீவாக இருப்பதன் காரணமாக இயற்கையாக அமைந்த துறைமுகப்பட்டினமாக இருக் கிறது. மேல் நாட்டிலிருந்து கப்பலில் பிரயாணம் செய்து வருபவர் எல்லாம் வந்து இறங்கும் இடம் இந்தத்துறை முகம்தான். விண்வழி பயணம் ஆரம்பிப்பதற்குமுன், மேல் நாட்டினர் எல்லாம் கப்பல் வழியாகத்தானே வந்திருக் கிறார்கள். அப்படி வந்தவர்களில் நம்மை ஆ ண் ட ஆங்கிலேயர்கள் முக்கியமானவர்கள். அதிலும் வைஸ்ராய் முதலியவர்கள் வரும்போது, அவர்கள் வந்திறங்கும் துறை அழகுடையதாக இருக்க வேண்டாமா. அதற்காக அந்தத் துறையில் ஒரு பெரிய வாயிலைக் கட்டியிருக்கிறார்கள். அதுவே இந்தியாவின் நுழைவாயில் (Gateway of india) என்றும் அழைத்திருக்கிறார்கள். மிக்க அழகாக பிம்மாண்ட மான அளவில் கட்டப்பட்ட வாயில் அது. நாம் வைஸ்ராய் இல்லை என்றாலும் நாமும் அங்கு செல்லலாம். அந்த நுழைவாயிலிலே நுழைந்து ப ம் பா ைய ச் சுற்றிப்