பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 தசாவதாரங்களில் இன்னும் பகவான் எடுக்காத அவதார மாகிய கல்கிக்கும் ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள், இதை கல்கிகாமந்திர் என்கின்றனர். இக்கோயில் கட்டி யிருக்கும் இடத்தில் ராஜாஜெய்சிங்கு அஸ்வமேதயாகம் நடத்தினாராம், அதன் ஞாபகார்த்தமாக வெள்ளை சலவைக் கல்லில் குதிரை ஒன்று செய்து வைத்திருக்கின் றனர். ஆம் கல்கியாக பகவான் அவதரிக்கும்போது, குதிரை மேல் ஆரோகணித்துக் கொண்டுதானே வருவார். ஆதலால் இது நம் நாட்டிற்கே புதிதான கோயில், பிரதான கோயிலாக இல்லாவிட்டாலும் கூட. இன்னும் ஜெய்ப்பூரின் பிரதான நகரைவிட்டு சுற்றுப் புறங்களில் காண வேண்டியவை எவ்வளவோ உண்டு. என்றாலும் ஜெய்ப்பூர் வந்திருக்கின்றோமே இங்குதான் அந்த அம்பர் மாளிகை இருக்கிறது என்று படித்திருக் கிறோம். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்று துடிப்போம். அதைப் பற்றி விசாரித் தால் அது, டில்லிப்போகும் சாலையில் ஏழுமைல் போனால்தான் பார்க்கலாம் என்பார்கள். சரி என்று காரை அந்தச் சாலையில் திருப்பி அம்பர் நோக்கிச் செல்ல வேண்டியதுதான். அங்குள்ள அம்பர் கோயிலும் அரண் மனையும் ஒரு மலை மீது இருப்பதைப் பார்ப்போம். காரில் வந்து இருந்தால் காரை ரோட்டில் நிறுத்திவிட்டு நாலு பர்லாங்கு தூரம் நடந்தே செல்லலாம். இல்லை பத்து ரூபாய் கட்டணம் கட்டிவிட்டு காரையே மலைமீது ஏற்றிக்கொண்டு செல்லலாம். இதையெல்லாம் விட கம்பீரமான முறை ஒன்று உண்டு, மலையடிவராத்தில் யானைகள் நிற்கும் அதன் பேரில் அம்பாரிகளும் இருக்கும். ஆளுக்கு எட்டு ரூபாய் என்று நாலுபேர் சேர்ந்து அம்பாரி யில் ஏறிக்கொண்டு மலைமேல் ஏறலாம். கொஞ்சம் தாராளமாகப் பணத்தை வீசினால் யானைமீது அம்பார் யில் ஏற்றி மேளத்தாளத்துடனேயே அழைத்துச் செல்வர். இந்த மலைமீது உள்ள கோட்டைக்குள்ளேயேதான்