பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 டிருக்கும் அன்னை காளியை வணங்கிய பின் உள்ளே சென்றால் பெரிய பெரிய ஹால்களைப் பார்ப்போம். அங்கு உள்ள சுவர்களிலும் தூண்களிலும் விதானங்களில் பல வர்ணக் கண்ணாடிகள் பதித்து ஒரு புதிய சொப்பன புரியையே உருவாக்கியது போலிருக்கும். வெள்ளிக் கம்பிகள் கொண்டு இழைத்த சுவர்களும் விதானங்களும் கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும், திறந்த வெளி முற்றங்கள் பரந்து கிடக்கும். அதையெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தால் வழி தெரியாது மயங்குவோம். கடைசியில் ஒருவழியாக வழி கண்டுபிடித்துத்தான் திரும்ப வேண்டும். மலையைவிட்டு இறங்கி அடிவாரத்திற்கு வந்தால் இங்கும் சில கோயில்கள் உண்டு என்பர். அதில் பிரபல கோயில்தான் ஜகத்சிரோமணி கோயில். இங்கு வேணு கோபாலன் கோயில் கொண்டிருக்கிறான். படிகள் ஏறியே செல்லவேண்டும். வழியில் இரண்டு பெரிய கல் யானைகள் நம்மை வரவேற்று நிற்கும். பக்தமீரா கட்டிய கோயில் அது என்று அங்குள்ளவர்கள் கூறுவார்கள். ஆனால் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் ராஜபீஹாரிமான் கட்டினார் என்பது தெரியவரும். ராஜாமான்சிங் தன் மைந்தன் ஜகத்சிங்கின் ஞாபகார்த்தமாகக் கட்டிய கோயில். ஆகையால் ஜகத்சிரோமணி கோயில். ஆகையால் ஜகத் இரோமணி கோயில் என்று கூறப்படுகிறது என்றும் விளங்கும். இனி ஜெய்ப்பூரை விட்டுக் கிளம்பலாம். இங்கிருந்து டில்லி செல்லும் வழியில் 50 மைல் சென்றால் பிராட் என்ற ஊர் வந்து சேருவோம். அது என்ன பிராட் என்று விசாரித் தால் அதுதான் பாரதத்தில் கூறப்படும் விராட நகரம். இங்குதான் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்தார்கள் என்று அறிவோம். இங்கு வீடுகள் அதிகம் இல்லை. விராட நகரத்தின் சின்னம் ஒன்றுமே இல்லை. இங்கு தின்பதற்கு கி ைடப்பது சீமை இலந்தைப்பழம் போன்ற பெரிய இலந்தைப் பழங்களே, அவைகளை