பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 எங்கள் கண்முன் வருவது குதுப்மினார்தானே? அதை நீங்கள் காட்டவே இல்லையே? என்று. குதுப்மினார் புது டில்லிக்கும் தெற்கே ஏழுமைல் தூரத்தில் இருக்கிறது. டாக்சி வைத்துக் கொண்டுதான் செல்லவேண்டும். செல்லும் வழியில் ஜப்தார்ஜங் பிரோஜ் ஷா முதலியோர் மசூயையும் போத்திகிமஜ்ஜித், பீகம்பூர் மஜ்ஜித் முதலிய வைகளையும் காணலாம். தெற்குக் கோடியில் தான் குதுப் மினார் என்னும் கோபுரம், 238-அடி உயர்ந்திருக்கிறது. தஞ்சை பெருவுடையாரது விமானம் 216:அடிதான் என்று தெரியும். அதைவிடவும் உயரமானது இது. இதனை வெளியில் நின்று பார்த்தாலே மிக்க கம்பீரத்தோடு காட்சி அளிக்கும். ஐந்து தட்டுக்களை உடையது அந்த கோபுரம். கோபுரத்திற்குள்ளேயே நல்ல படிக்கட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள். 379 படிகள் கடந்து சென்றால் தான் அக்கோபுரத்தின் உச்சிக்கு ஏறமுடியும். ஏறுவது சிரமமே. ஆனால் ஏறிவிட்டால் டில்லி நகர் முழுவதையும் அங்கிருந்து நோட்டம் விடலாம். இதன் பக்கத்திலே அசோகர் கட்டியதாகக் கருதப்படும் இரும்புத்துாண் இருக் கிறது. இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் வழவழி என்று இருக்கிறது. இன்னும் இந்தப் பிரதேசத்தில் அல்டாமிஷின் சமாதியும், அலாய் தர்வாலாவும், அலாய் மினாரும் இருக் கிறது. இவைகளில் எல்லாம் நமக்கு அக்கறை இராது. குதுப்மினார் இருக்கும் பிரதேசத்திலேயே ஜாக் மாயா கோயில் ஒன்று இருக்கிறது. இதனை பஞ்சப் பாண்டவர் களில் மூத்தவரான யுதிஷ்டிரரே கட்டினார் என்று கதை. கண்ணனின் சகோதரியான ஜாக்மாயா தேவிக்கு என்று அமைந்த கோயில். நானுாறு சதுர அடி விஸ்தீரணத்தில் இருக்கும். இக்கோயிலில் பிரகாரத்தில் சின்னஞ்சிறு கோயில்கள் பல இருக்கும். rேத்திராடனம் புறப்பட்ட நாம் ஜாக்மாயா தேவியையும் வணங்கியே திரும்பலாம் தானே.