பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 பொருட்களை விதைக்கப்போகிறேன் என்றிருக்கிறான். விஷ்ணு விரும்பியபடியே தன் உடலையே துண்டு துண்டாக வெட்டி அவைகளையே விதையாக விதைக்க அனுமதித்து இருக்கிறான். அவனது தியாகத்தை மதித்த பரந்தாமனும் அந்த இடம் அவன் பேராலேயே வழங்கவும், அந்த இடத் தில் வந்து இறப்பவர்களுக்கு எல்லாம் முத்தி அருளவும் இசைந்திருக்கிறான். அதனால்தான் என்னவோ கெளர வரும் பாண்டவரும் இந்த இடத்தைத் தங்கள் போர்க்கள மாக அமைத்திருக்கின்றனர். இங்கு செல்லும் நாமும் நம் உயிரையே விட்டு முத்திப்பேறு பெறலாம் என்றால் அந்தப் பொல்லாத யமன்நம்மை அணுகவும் அஞ்சி ஒதுங்கிவிடு கின்றானே. ஆதலால் நாம் முத்தியை மறந்து அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்படலாம். குருக்ஷேத்திர பூமியை முழுவதும் சுற்றிவர நம்மால் இயலாது. அதிதனை துாரம் அது பரந்து கிடக்கிறது. அங்கு ஏழு வனங்கள், ஏழு நதிகள், ஏழு சரோவரங்கள், ஏழு கூபங்கள் எல்லாம் இருந் திருக்கின்றன. அன்று அவற்றில் எவை எவை எல்லாம் இன்று எஞ்சி நிற்கின்றன என்று கூற இயலாது என்றாலும், நாம் குருகேஷத்திரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து ஒரு மைல் சென்றதும், தானேஸ்வர் என்ற பிரதேசத்தை அடைவோம். அதுதான் நாம் முதலில் செல்லவேண்டிய இடம், அங்குதானே பிரம்மசரஸ் என்ற பெரிய குளம் இருக்கிறது. இதுதான் குருக்ஷேத்திரத்தில் உள்ள பெரிய குளம். ஆதியில் இது 60 சதுரமைல் விஸ்தீரணமுடையதாக இருந்திருக்கிறது. இன்று 1442-அடி நீளமும் 700 அடி அகலமும் உள்ளதாய் இருக்கிறது. இன்று இக்குளத்திற்கு கீழ்கரையிலும் வடகரையிலும் படிக்கட்டுகள் இருக்கின்றன. வடகரையில் நிறைய மரங்கள் நிற்கின்றன. இக்குளத்தில் உள்ளே சில தீவுகள் இருக்கின்றன. அவைகளில் கோயில் களும் இருக்கின்றன. இந்த பிரம்மசரசை ஒட்டியே ஒரு சிறிய குளமும் இருக்கிறது. அதனை சன்னி ஹித் குளம் என்கின்றனர். இது ஒரு சிறிய குளமே 1500 அடி நீளமும் 300 அடி அகலமும் உடையதாய் இருக்கும். இக்குளக்கரை