பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வேங்கடம் முதல் குமரி வரை

நடத்தியிருக்கிறார் ஒரு சிவலோகநாதர். கோயிலுள் விட வேண்டாம், தேரடியில் நின்று தரிசிப்பதற்காவது வழி செய்ய வேண்டும் என்ற ஹரிஜன பக்தனான நந்தனுக்காக வழிமறைத்திருக்கும் நந்தியை 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று உத்தரவு போட்டார் அவர். அந்தச் சிவலோக நாதரைக் காணவே இன்று செல்கிறோம் திருப்புன்கூருக்கு.

திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயிலுக்கு, நேர் மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வைத்தீசுவரன் கோயில் ஸ்டேஷனில் இறங்கி பஸ்ஸில் ஏறியோ இல்லை, கார், வண்டி ஏதாவது வைத்துக் கொண்டோ செல்லலாம். போகிற வழியெல்லாம் செந்நெல் வயல்கள், பங்கயங்கள் மலரும் பழனங்கள், எங்கு பார்த்தாலும் ஒரே தென்னஞ் சோலைகள். ரோட்டை விட்டுத் தெற்கே திரும்பி ஒன்றிரண்டு பர்லாங் தூரம் வளைந்து வளைந்து சென்றால், கோயிலை அடுத்த குளக்கரை வந்து சேருவோம். குளக்கரையிலிருந்து கோயிலைக் காண்பதே ஓர் அழகான காட்சி.

திருப்புன்கூர் கோயில்