பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
145
 

'செமண்ட்' வர்ணத்திலேயே இருக்கிறது. கோயில் பஞ்ச பிரகாரத்துடன் இருக்கிறது. மூன்று பிராகாரத்தைக் கடந்தே மகாமண்டபம் வரவேணும், அந்த மண்டபத்தின் இடப்பகக்கத்திலே இருப்பவர்தான் கள்ளவாரணப் பிள்ளையார். தேவர்கள் கொண்டு வந்த அமுத கலசத்தைக் களவாடி எடுத்து ஒளித்து வைத்து, பின்னர் அவர்கள் வீழ்ந்து வணங்கிய பின்னரே கொடுத்தார் என்பது தல வரலாறு. ஆம் திரிபுர சம்ஹார காலத்திலேயே, தன்னை நினையாது தன் தந்தை புறப்பட்டார் என்பதற்காக அவருடைய தேரின் அச்சையே முறித்தவராயிற்றே. அவர் சும்மா விட்டு விடுவாரா இந்தத் தேவர்களை? நாமும் அவரை முதலிலேயே வணங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் எதையாவது நம்மிடமிருந்தும் திருடி ஒளித்து வைத்து விடுவார்.

இந்த மண்டபத்தின் வலப்பக்கத்திலேதான் தாலசம்ஹாரர் அழகிய சபை ஒன்றில் கோயில் கொண்டிருக்கிறார். கடிந்த காலனை நிக்கிரஹ அனுக்கிரகம் பண்ணின அவசரத்தில் தெற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். வலது கரங்களில் சூலமும் மழுவும், இடது தரங்களில் பாசமும் தர்சனி முத்திரையும் ஏந்தியவராய் நிற்கிறார். வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி உதைக்கும் நிலை. யமனோ காலசம்ஹாரர் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கின்றான், கூப்பிய கையராய் மார்க்கண்டேயரும் நிற்கிறார் அங்கே. இந்தக் காலசம்ஹார மூர்த்தி செப்புச்சிலை வடிவில் அமைந்த கம்பீரமான திருவுரு என்றாலும் இந்த மூர்த்தியை அவன் இருக்கும் வண்ணத்திலே நாம் காண முடியாது. வெள்ளி மஞ்சத்தில் ஏறி நின்று தங்கக் கலசமும் பட்டுப் பீதாம்பரங்களும் அணிந்தவராய்த்தான் காட்சி கொடுப்பார். இவருக்கு வருஷத்துக்குப் பதினொரு தடவைதானே அபிஷேகம், அபிஷேக காலத்துக்குக்கூட ஆடை அணிகளைப் பூரணமாகக் களையமாட்டார்களே. இந்தக் காலசம்ஹாரர்

வே.மு.கு.வ-10