271
இடைமருது ஈசனார்
ஒரு கவிஞன். கிராமத்தில் வாழ்கிறான். பட்டண நாகரிகம் எல்லாம் அறியாதவன். அவன் ஒருநாள் மாலை வேளையில் மதுரைத் திருநகருக்கே வருகிறான். தெரு வீதிகளையெல்லாம் சுற்றிச் சுற்றிக் கீழக்கோபுரவாயிலுக்கே வந்து விடுகிறான். அந்தச் சமயத்தில் ஒரு கணிகை, பேரழகு வாய்ந்தவள் அங்கு வருகிறாள். அழகை ஆராதனை பண்ணும் கவிஞன் ஆயிற்றே, ஆதலால் அவள் அழகைக் கண்டு மெய் மறக்கிறான்; அவள் பின்னாலேயே நடக்கிறான்; அவளை அணுகி அவள் வீட்டின் விலாசம் கேட்கிறான். இவனது நிலை கண்டு புன்முறுவல் பூத்தாலும், 'யாரோ ஒரு பட்டிக்காட்டுப் பைத்தியம் இது' என்றுதான் எண்ணுகிறாள் அவள். இதற்கு வீடு இருக்கும் இடம் சொல்லானேன் என்று கருதுகிறாள். 'இங்கே, இக்கோபுர வாயிலிலேயே நில்லும்; கோயிலில் இருந்து திரும்பும் போது நானே கூட்டிச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டுக் கோயிலுக்குள் போகிறாள். போனவள் கீழக் கோபுர வாயில் வழியாகத் திரும்பாமல் தெற்குக் கோபுர வாயில் வழியாகவே வீட்டுக்குப் போய்விடுகிறாள். பட்டிக்காட்டுக் கவிஞன் காத்து நிற்கிறான், நிற்கிறான் பலமணிநேரம். தம் உள்ளம் கொள்ளை கொண்டவள் வராதது கண்டு, கோயிலிலிருந்து திரும்புவர்களிடத்து, அந்தக் கணிகையின்