பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
49
 

வன்கரை பொருது வருபுனல் பெண்ணை தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதை செஞ்சொல் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலம் பெண்ணைமலையற்கு உதவி...
மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல்புகும் கபிலக் கல்.

என்பது கவிதை. இந்தக் கபிலக் கல்லுக்கும் வணக்கம் செலுத்திய பின்னர் நாம் திரும்பலாம், கோவலூரை விட்டு.

வே.மு.கு.வ -3