பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வேங்கடம் முதல் குமரி வரை

யிருக்கிறார்கள். இனிக் கோயிலுள் நுழைந்து கயிலாய முடைய மகாதேவரை வணங்கலாம்.

இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன்

செம்பியன் மாதேவி

அம்பிகையின் கோயில் இருக்கிறது. அம்பிகை பெரிய நாயகி என்ற பெயரோடு அருள் பாலிக்கிறாள், இந்தக் கோயிலுள் பல செப்புப் படிமங்கள் உண்டு. அவைகளில் சிறப்பாயிருப்பது பழைய பைரவர் வடிவம் ஒன்று. இக்கோயிலில் சிலாவடிவமாகச் செம்பியன் மாதேவியின் திருக்கோலம் ஒன்றும் இருக்கிறது. இந்தச்சிலை கலை, அழகு பொருந்தியதல்ல என்று சமீபத்தில் செப்புச் சிலை வடிவில் இச் சிவ பக்தையாம் செம்பியன் மாதேவியைச் செய்து வைத்திருக்கிறார்கள். அது அழகாக இருக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் சிறப்பாக நடக்கிறது. இது ஏழைக் கோயில் அல்ல. 280 ஏக்கர் நன்செயும் 115 ஏக்கர் புன் செயும், அவற்றின் மூலம், வருடம் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் வருமானமும் உடையது.

இக்கோயில் புராணப் பிரசித்தி உடைய கோயில் அல்ல; என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய கோயில், இந்தக் கோயிலில் இருபத்து மூன்று கல் வெட்டுக்கள் இருக்கின்றன. சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்று,