பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

139

இத்தலத்தில் இதைக் கேட்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கருவறையில் லிங்கத் திருவுருவுக்குப் பின்னர் உள்ள சுவரில் பார்வதி பரமேசுவரர் உப்புச உருவில் திருமணக் கோலத்தில் இருக்கின்றனர். புது மணப் பெண்ணான பார்வதியே நாணிக்கோணி உட்கார்ந்திருக்கிறாள். இந்தச் சுவர் சிற்பத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் திருமஞ்சனம். திருமஞ்சனம் ஆனதும் சந்தனக்காப்புச் சாத்துவார்கள். இந்தச் சந்தனக்காப்பை ஒரு வருஷம் கழித்து அடுத்த திருமஞ்சனக் காலத்தில்தான் களைவார்கள். கல்யாணமான தம்பதிகளை அப்படியே மணங்கமழ் சந்தனத்திலேயே மூழ்கடித்து வைத்து விடுகிறார்கள் பக்தர்கள். மணம் நிறைந்தவர்களாகத் திருமணத் தம்பதிகள் வாழ வேண்டும் என்ற ஆசை போலும்!

இத்துடன் இவர்களுக்கு முன்னமேயே இத் தென்திசை நோக்கிவந்து அகத்தியரும் இந்தக் கோயிலில் இருக்கிறார். இங்கு மாத்திரமா இருக்கிறார்; இக்கோயிலுக்குத் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள தலத்திலும் இருக்கிறார். அந்தத் தலத்தின் பெயரே அகத்தியான் பள்ளி, அங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர். அம்மையோ பாகம் பிரியாள். இன்னும் வேறு என்ன சான்று வேண்டும், இறைவன் அகத்தியர்க்குத் தன் திருமணக்கோலத்தை இத்தலத்தில்தான் காட்டினான் என்று நிரூபிக்க? இன்னும் அப்பர் பெருமான் தமது திருத்தாண்ட