பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

159

கிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்று அழைக்கிறார்கள். ஹேமாப்ஜம் என்றால் பொற்றாமரை என்றுதானே பொருள். அவளையே செங்கமல நாச்சியார் என்று நல்ல தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறார்கள்,

இக்கோயில் பிரகாரங்களில் லக்ஷ்மி நாராயணன், அனந்த

சக்கரத்தாழ்வார்

பத்மநாபன், வெங்கடேசப் பெருமாள், வைகுண்டவாசன் முதலிய மற்றைய விஷ்ணுவின் பல கோயில்கள் இருக்கின்றன. ஆண்டாளுக்கும் சக்கரத் தாழ்வாருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இன்னும் ஆழ்வாராதியர் எல்லாம் தனிக் கோயிலிலேயே இருக்கிறார்கள். இத்தனை இருந்தும் இங்குள்ள ராஜ கோபாலனோ அல்லது வாசுதேவனோ ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்படவில்லை. ஆதலால் நூற்றெட்டுத் திருப்பதியில் ஒன்றாகக் கணக்கிடப்படவும் இல்லை. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் கடைசி ஆச்சாரியரான மண்வாள மாமுனிகளின் அபிமான ஸ்தலம் என்ற சிறப்பு உண்டு இத்தலத்துக்கு. ஸ்ரீராமானுஜர் 'ஒரு நாயகமாய்' என்ற திருவாய் மொழிப் பாசுரத்தை மைசூர் திருநாராயணபுரத்து பெருமானுக்குச் சமர்ப்பித்ததுபோல் மணவாள மாமுனிகளும் ‘தீரப்பாரையாமினி' என்னும் திரு வாய்