பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வேங்கடம் முதல் குமரி வரை

சீதையும் ராமனும் இங்கு வந்து விட்டார்களே, அங்குள்ள இலக்குவன் என்ன ஆனான் என்று கேட்டேன், இந்த வடுவூர் பட்டாச்சாரியரிடம். “ அதுவா? அங்குள்ள லஷ்மணனுக்கு 'பிரமோஷன்' ஆகிவிட்டது. அவனையே ராமனாக்கி வேறு லட்சுமணன், சிதை முதலியவர்களைப் புதிதாகச் செய்து அவர்களுக்கு ஒரு சிறு கோயிலும் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்றார்.

இதன் உண்மையைத் தலைஞாயிறு செல்லும் காலத்தில் தான் விசாரித்து அறிய வேணும். இப்படித் தலைஞாயிற்றிலிருந்து எழுந்தருளிய ராமனே இன்று வடுவூர் கோதண்டராமன் என்ற பிரசித்தியோடு விளங்குகிறான். இத்தலத்தில் ராமநவமி உற்சவம்தான் பெரிய உற்சவம். இன்னும் இந்த ஊரில் கைலாசநாதர் மேற்கே பார்க்க இருக்கிறார். பிடாரி வடக்கே பார்க்க இருக்கிறாள். இப்படி மூன்று திசைகளிலிருந்தும் இத்தன்னரசு நாட்டு மக்களைப் பரிபாலிக்கிறார்கள் இவர்கள் மூவரும். அவகாசம் உடையவர்கள் எல்லாம் கைலாசநாதர், அழகிய சுந்தரி முதலியவர்களையும் தரிசித்துவிட்டுத் திரும்பலாம்.

அடம்பர் ராமன்