பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இறைவன் அம்மையின் வளைத்தழும்பும் முலைத்தழும்பும் பெற்றார் என்பது புராணக் கதை. அப்படி சக்தி. தழுவி முத்தம் கொடுத்த தலமே இது என்பர். இதற்கு ஆதாரமாகக் கோயிலுள் சென்றதும் அர்த்த மண்டபத்தை அடுத்த இடத்துக்கு அழைத்துச் செல்வர். அங்க ஒரு மாடக்குழியில் அம்மையின் தவக்கோலம் செதுக்கப்பட்டிருக்கும். மேலும் நிர்வாகிகள் கூற்றை வலியுறுத்த, அத்தனைத் தழுவிக் கட்டிப்பிடிக்கும் அன்னையுமே சிலை உருவில் அங்கே இருப்பர். இன்னும் இத்தலத்துக்கு வந்த அப்பர்,

{{left margin|2em|

மட்டார் குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்து அருளும்
இட்டா திருச்சக்தி முத்தத்து
உறையும் சிவக்கொழுந்தே

}

என்று வேறு பாடிவிட்டுப் போயிருக்கிறார். இனியும் சந்தேகம் ஏன்? சக்தி முத்தம்- காரணப் பெயரே என்று முடிவுகட்டி விடலாமே?