பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வேங்கடம் முதல் குமரி வரை

இன்று துவாரகையில் யாதவ மன்னனாக இருந்து செல்வம் கொழிக்க வாழ்வதை எடுத்துக் காட்டினாள். அந்தப் பழைய பள்ளித் தோழனிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினால் ஏதாவது அவன் செய்ய மாட்டானா? என்று கேட்டாள். குசேலரும் மனைவியின் விருப்பப்படியே துவாரகை சென்றுவர இசைந்தார்; புறப்பட்டார். பெரியவர்களைப் காணப் போகும்போது சும்மா போகக் கூடாதே என்று கொஞ்சம் அவல் இடித்து அதை ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொடுத்து அனுப்பினாள் மனைவி. எத்தனையோ அல்லல்களையெல்லாம் சமாளித்துத் துவாரகைக்கு வந்து சேர்ந்து விடுகிறர் குசேலர். அரண்மனைக்குள் நுழைந்ததும் கண்ணன் எதிர் கொண்டழைத்து மார்புறத் தழுவிக் குசலம் விசாரிக்கிறான்.

அப்படிக் கொஞ்ச நேரம் அளவளாவிய பின், ‘எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்? அண்ணி சும்மா அனுப்பி யிருக்க மாட்டாளே!' என்று துளைத்துத் துளைத்து, அவர் கொண்டு வந்திருந்த அவல் பொட்டணத்தை அவிழ்த்து அதில் ஒரு பிடி அவல் எடுத்து வாயில் போட்டு, மென்று சுவைக்க ஆரம்பித்து விடுகிறார் கண்ணன். இதை வல்லூர் தேவராஜுப் பிள்ளை,

மலிதரும் அன்பின் தந்த
வண்பொதி அவிழ்த்து நோக்கி
வலிதரும் அவற்றுள் நன்று
வாய்த்தது நமக்கு இது என்னா
ஒலிதரு கழற்கால் ஐயன்
ஒரு பிடி அவலை, காதல்
பொலிதர எடுத்து வாயில்
போட்டுக் கொண்டான் மாதோ.

என்று தமது குசேலோபாக்கியானத்தில் பாடுகிறார். ஆம்! அன்று கோகுலத்தில் உறியில் உள்ள வெண்ணெயை எல்லாம்