பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

241

ஸ்தம்பம் விலகியிருக்கிறது' என்று. அது யார் நம்பாடுவான் என்று தெரிந்த கொண்டே மேலே நடக்கலாம். குறுங்குடியை அடுத்த மகேந்திரகிரியிலே பாணர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் யாழ் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்களில் ஒருவன் குறுங்குடி நம்பியைக் காண வருகிறான். கார்த்திகை மாதம் சுக்லபக்ஷத்து ஏகாதசியன்று. வழியிலே பசியோடிருந்த பிரமராக்ஷஸன் ஒருவன் இவனைப் பிடித்துக் கொள்கிறான். நம்பியைத் தரிசித்து விட்டு வந்து அவனுக்கு இரையாவதாகச் சொல்லி விடைபெற்றுக் கோயில் வாயிலில் நின்று நம்பியைத் தரிசிக்க முயல்கிறபோது கோயிலில் கொடிமரம் மறைக்கிறது. ஆயினும் பக்தி சிரத்தையோடு பாடுகிறான். நம்பியும் பாணனுக்கு மறைக்காமல் இருக்கக் கொடி மரத்தை நகரச் சொல்கிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து, நம்பியைப் பாணன் தரிசிக்க வகை செய்கிறது. இதனால் மெய் புளகித்த பாணனும்.

எங்ஙனயோ அன்னைமீர்காள்
என்னை முனிவதுநீர்?
நங்கள் கோலத்திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாயொன்றினோடும்
செல்கின்றதென் நெஞ்சமே.

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை கைசிகப் பண்ணில் அமைத்துப் பாடுகிறான். பாட்டை அவன் பாடப்பாட நம்பியும் மகிழ்ந்து அவனை ‘நம்பாடுவான்' என்றே அழைக்கிறான். தன்னைப் பாடிய நம்பியை 'நம்மைப் பாடியவன்' என்று நம்பி அழைத்ததில் வியப்பில்லைதானே! நம்பாடுவான் என்ற பாணன் பாட்டை விரைவாகப் பாடுவதைக் கேட்ட நம்பி, காரணம் வினவ, தான் பிரமராக்ஷஸனுக்குக் கொடுத்து வந்த வாக்கைச் சொல்கிறான். நம்பியின் அருளால் பிரமராக்ஷஸனது பசி நீங்கிவிடுகிறது. அவன் தன்னிடம் வந்த நம்பாடுவானைப் புசிக்க மறுக்கிறான், இடை வந்த

வே.மு.கு.வ-16