பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

17

இப்படிப்பட்ட அரக்கர்கள் இன்றுதான் இருக்கிறார்கள் என்றில்லை. அன்றும் இருந்திருக்கிறார்கள்.

ஹிரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க பரந்தாமன் பன்றி உருவில் தோன்றிக் கடலுக்குள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். பூமிதேவியை சிறை மீட்டுக் கொண்டு வந்த மூர்த்தியையே பூவராக மூர்த்தி என்கிறோம். இந்த பூவராக மூர்த்தியின் அற்புத வடிவைக் காண நாம் அந்த ஸ்ரீ முஷ்ணத்திற்கே செல்ல வேணும். அத்தலத்திற்கே செல்கிறோம் இன்று.

ஸ்ரீமுஷ்ணம் தென் ஆர்க்காடு மாவட்டத்தின், சிதம்பரம் தாலுகாவில் ஒதுக்குப் புறமாக உள்ள ஊர்.

சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் வழியில், சேத்தியாத் தோப்பு என்ற ஊர்வரை சென்று அதன்பின் தென்மேற்காகச் சென்றால் ஊர்போய்ச் சேரலாம். ரயில் வசதியெல்லாம் கிடையாது. சிதம்பரத்திலிருந்து 26 மைல் தூரத்தில் உள்ளது. சொந்தகார். உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லாவிட்டால் இந்த ஊருக்கு நல்ல பஸ் வசதியும் இருக்கிற காரணத்தால் பஸ்ஸிலேயே சிரமம் இல்லாமல் போகலாம். ஊருக்கு வட

வே.மு.கு.வ-2