பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

21

உற்சவத்தில் தேரோட்டம் முடிந்ததும் கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தமாடுவார். இந்த தீர்த்தோத்சவத்தை ஒரு மகம்மதியப் பெரியார் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூலதனத்தைக் கொண்டு, உப்பு வேங்கடராயர் என்ற ராயர் வம்சத்தவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் மகம்மதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார். இன்றும் இப்படி சர்வ சமய சமரச வாதியாக யக்ஞ வராகர் எழுந்தருளுவது மிக மிகச் சிறப்பானதல்லவா?

இந்த யக்ஞவராகர் ஒரு காலத்தில் திப்பு சுல்தானால் களவாடப்பட்டு மறைந்திருக்கிறார். அப்போது புதிதாகச் செய்யப்பட்ட மூர்த்தியே அபிஷேக ஆராதனை ஏற்றிருக்கிறார். யக்ஞ வராகர் திரும்பவும் தன் யதாஸ்தானத்துக்கு வந்த போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டவர் போக நாராயணன் என்ற பெயரோடு கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறார். இந்த போக நாராயணனே, சாதாரண நாட்களில் பஞ்ச பர்வ உற்சவங்களை ஏற்றுக் கொள்கிறார்.

பூவராகனை, யக்ஞவராகனை, போக நாராயணனை எல்லாம் தரிசித்து வெளியே வந்து, தென்பக்கம் கிழக்கே பார்த்த தனிக் கோயிலில் இருக்கும் தாயாரையும் வணங்கலாம். அவள் அருளையும் பெற்று, கோவில் பிராகாரத்தில் ஒரு சுற்று சுற்றினால் அங்கு வடபுறம் ஒரு