பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

31

சாமியின் பிரசாதமாக மாறிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள கோயிலிலேதான் ஆதி வில்வவரைநாதர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் சந்நிதியிலே பவள மல்லிகை ஒன்று பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் இதே சந்நிதியில் பெரிய கோயிலை ஒட்டி ஒரு பலq. பலாவில் இரண்டு வகை. ஒன்று வேரிலேயே! பழங்களை உதிர்க்கும். மற்றொன்று கிளைகளில் பழங்களைத் தரும். இந்தப் பலா கிளைகளிலும் வேரிலுமே பழங்களைக் காய்த்துக் கொண்டிருக்கிறது. பழம் என்றால் ஒன்றிரண்டு அல்ல. ஏதோ கொடி முந்திரிப்பழம் போல கொத்து கொத்தாய், பலாப் பழங்களை ஏந்தி நிற்கிறது. எண்ணற்ற பழங்கள் இருப்பதால் எல்லாம் சிறிய அளவிலேயே இருக்கின்றன.

இங்குள்ள வில்வநாதர் சந்நிதிக்கு மேற்பக்கம் தான் நூற்றுக்கால் மண்டபம், அதற்கு வடபுறமே வல்லாம்பிகை கோயில். இங்குள்ள வல்லாம்பிகையே தனுஷ்மத்ஸ்யாம்பாள் என்கின்றனர். அந்த வல்லாம்பிகையையும் வணங்கிவிட்டு பாதாள கோயிலை வலம் வந்து கீழ்புறம் உள்ள வாயில் வழியாக நுழைந்துதான் வல்லநாதரை தரிசிக்க வேணும்! இந்த வாயிலிலேதான் நந்தி கிழக்கு நோக்கிய வண்ணம் படுத்திருக்கிறது. கருவறை யிலே வல்லநாதர் லிங்க வடிவிலே கோயில் கொண்டிருக் கிறார். இவரையே நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் பாடியிருக்கிறார்.

சார்ந்தவர்க் கின்பங்கள்
தழைக்கும் வண்ணம்
சேர்ந்தவன், நேரிழை
யோடும் கூடி
தேர்ந்தவர் தேடுவார்
தேடச் செய்தே