பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

57

குறித்த இரவும் வந்தது. செட்டியாரும் கோலாகலமாக வந்தார்.

ஆனால் அவரால் நாச்சியாரின் தெய்வீக ஒளிமுன், கண்திறக்க முடியவில்லை. தனது தவறை உணர்ந்தார். நாச்சியார் அடிகளில் வீழ்ந்து வணங்கினார். மன்னிப்பைப் பெற்று அகன்றார். நாச்சியார், செட்டியார் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்த உடனே உடையவரும் இருந்து விட்டார். அங்கேயே கொஞ்சகாலமாக, சமணர்கள் கொதித்தெழுந்தனர். வாதப் பிரதி வாதங்கள் மும்முரமாய் நடந்தன. சமணர்கள் தோற்றனர். தோற்றதோடு மட்டுமல்லாமல் ஒப்பந்தப்படி கழுவேறவும் தயாராகி விட்டனர். பரம தயாநிதியான உடையவர் அத்தனை சமணர்களையும் அந்தணர்களாக ஆக்கினார். எண்ணாயிரம் பேர் அன்று புனர் ஜென்மம் பெற்றனர். பருத்திக் கொல்லையே எண்ணாயிரம் என்று பெயர் பெறலாயிற்று.

அஸ்டஸகஸ்ரம் என்ற பிராமண வகுப்பினர் தோன்றிய கதை இதுதான் என்பர் தெரிந்தவர்கள், இவர்கள் குடியேறிய கிராமங்கள் பிரம்ம தேசம், சதுர் வேதி மங்கலம் என்றெல்லாம் தெரிகிறது.

எண்ணாயிரத்தில் அழகிய நரசிங்கப்பெருமாள் கோயில் உடையவரால் உருவாக்கப்பட்டது என்பது கர்ண பரம்பரைக் கதை, நரசிங்கரின் உக்கிரம் அளவு கடந்ததாய் இருந்திருக்கிறது. மூலவிக்கிரகம் பின்னப்பட்டு வெளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுதையில் ஆக்கப்பட்ட நரசிங்கர்தான் இன்றைய மூலவர்.

பெருமாளையும், பெருமாளுக்கு ஒரு கோயிலையும் ஆக்கிக் கொடுத்த உடையவரும் இங்கே கோயில்