பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. செவிசாய்த்த விநாயகர்

ரு சிறு கதை. ஆம் பள்ளிச்சிறுவராக இருந்த போது நாமெல்லாம் படித்தக்கதைதான். வகுப்பில் வரிசையாக பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லோரும் ஏழு, எட்டு வயது நிரம்பாதவர்களே. திண்ணைப் பள்ளிக் கூடந்தானே. வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பையன்களில் சிலர் பாடத்தைக் கேட்கிறார்கள், சிலர் விளையாடுகிறார்கள். சிலர் முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கு ஓர் எலி வளை, வளைக்குள் ஓர் எலி எதனையேர் இழுத்துக் கொண்டு செல்கிறது. இதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு பையன். பாடம் நடத்திக் கொண்டிருக்கிற உபாத்தியாயர் திடீரென்று அந்தப் பையனைப் பார்த்து கேட்கிறார்:

'அடே! நான் சொல்லுகிறதெல்லாம் உன் காதில் நுழைகிறதாடா' என்று எலியையே கவனித்துக் கொண்.டிருந்த பையன் படக் கென்று 'ஆமா சார் எல்லாம் நுழைந்து விட்டது வால் மாத்திரம்தான் நுழையவில்லை சார்' என்று பதில் சொல்லுகிறான். இத்துடன் இந்த ஹாஸ்யக்கதை முடிந்து விடுகிறது. நாமும் கேட்டுக் களித்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பதிலைக் கேட்டு அந்த வாத்தியார் சும்மாவா இருந்திருப்பார்? பயலே! பாடத்தைக் கவனிக்காமல் எலி வளையில் நுழைவதையா அத்தனை அக்கறையோடு கவனித்துக் கொண்டே இருந்திருகிறாய் என்றுதான் கேட்டிருப்பார் -

இந்த வாத்தியார் வேலையையே தன் சீமந்த மைந்தனான விநாயகரிடம் செய்திருக்கிறார், சிவபெருமான். அந்தக் கதை தெரிய வேண்டாமா! கதை இதுதான்.