பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

67

இதற்குள் தினைப்புனம் காவல் வேலை முடிந்து, வள்ளி அரண்மனை திரும்பி விடுகிறாள். முருகனும் அரண்மனை சென்று வள்ளியை அவன் தந்தை அறியாமல் சிறை எடுத்து வருகிறான். வேடுவர் தலைவனான நம்பி, முருகனும் வள்ளியும் சென்ற வழியில் தொடர்ந்து வருகின்றான். போர் நிகழ்கிறது. போரில் வேடுவர் மடிகின்றனர் பின்னர். முருகனே வேட்டுவர்களையெல்லாம் எழுப்பி, தன்னையும் யாரென்று தெரிவித்து வள்ளியை மணம் புரிந்து கொள்கிறான். தன் காதல் மனைவியான வள்ளியையும் அழைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்கு தன் இரண்டு மனைவியருடன் இல்லறம் நடத்துகிறான்.

இதுதான் கதை, தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப இக்கதை அமைந்திருப்பது சுவையாக இருக்கிறது, தமிழ் நாட்டுத் தலங்களில், முருகனைப் பல கோணங்களில் கண்டு களித்த நான் வள்ளிமலை என்னும் தலத்திற்கு தினைப்புனம் காக்கும் வள்ளியையும், வேட்டுவனாகி வந்த வேலனையும் காணும் ஆவலுடனேயே சென்றேன்.

அதற்காக நூற்றுக்கு மேற்பட்ட படிகள் எல்லாம் ஏறி மலையை அடைந்தேன். அங்குள்ள பாறைகள், குகைகள், கோயில் எல்லாம் சுற்றி அலைந்தேன். வள்ளிமலை என்ற பெயருக்கு ஏற்ப, வள்ளி கவண் ஏந்திய கையளாய். ஒரு பாறையில் சிற்ப வடிவில் இருப்பதைக் கண்டேன்.

சரி, இங்கு வள்ளியிருந்தால் அவளைத் தேடிவந்த வேடுவனும் இருக்கத்தானே வேண்டும் என்று அவனைத் தேடினேன் அங்கு அவன் அகப்படவில்லை. கோயிலுள் சிலையாகவும் செப்புப் படிமமாகவும் இருப்பவன், வள்ளி தேவயானையுடன் இருக்கும் முருகனாகவே இருக்கிறான். அதனால் ஏமாற்றமே அடைந்தேன். அந்தச்