பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

69

வேலுக்குப் பதில் வில் மட்டுமே ஏந்தியவனாய் நின்றுவிட்டால், வேட்டுவ வடிவம் பூரணமாகி விடும் என்டாது என் எண்ணம். இந்த வடிவழகனை நான் வணங்கிக் கொண்டிருந்தபோது, இப்படி வேட்டுவ வடிவில் உள்ள முருகனை நான் நீண்ட நாளாகத் தேடி அலைத்திருக்கிறேன். வேறு எங்கும் கண்டதில்லை என்றேன், பக்கத்தில் இருந்த அன்பர் திருச்செங்கோடு என்னும் தலத்தில், மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள முருகனைப் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஓ! பார்த்திருக்கிறேன். அவனும் இடக்கையில் கோழி ஒன்றை இடுக்கியிருக்கிறான் என்பதும் தெரியும். என்றாலும் இந்த செங்கோட்டு வேலவனை மற்றபடி வேட்டுவன் என்று சொல்லும் வகையில் உருவ அமைப்பு இல்லையே என்றேன்.

வேலுக்குரிச்சி வேலவன் நல்ல வேட்டுவ வடிவினன். தமிழ் நாட்டில் வேறு இடங்களில் காணக் கிடைக்காத வடிவினன். வள்ளியை மணம் புணர வந்த நிலையில் முதற்படி இந்நிலை. நமக்கெல்லாம் அவன் வேட்டுவனாகக் காட்சி கொடுத்தாலும் எல்லாம் அறிந்த அந்த வள்ளியின் கண்களுக்கு அவனே தான் மணக்க விரும்பிய வேலவன் என்று தெரியாமல் இருக்குமா என்று எண்ணினேன். என் எண்ணத்தை உணர்ந்தாரோ என்னவோ அர்ச்சகர் கவசம் சாத்தட்டுமா என்றார். 'சரி' என்றேன். உடனே திரையை இழுத்து மறைத்து விட்டு விபூதி அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் அணிவித்துப் பின்னர் திரையை விலக்கினார்.

அன்று வள்ளியின் கண்களுக்கு வேடன் எந்த உருவில் தோன்றியிருப்பான் என்பதையுமே கண்டேன். இளைஞனாக, அழகனாக இருப்பவன்தானே முருகன், இளமையும், அழகும் நிறைந்தவனாக இருப்பதோடு,