பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வேங்கடம் முதல் குமரி வரை

மனைவி சீதையை இராவணன் எடுத்துச் சென்று, அசோக வனத்தில் சிறை வைத்திருந்தபோது, பிரிவுத் துயரை அனுபவித்தவன்தானே?

ஆதலால் பக்தனாம் வேத சாரரின் துயர் துடைக்க வேண்டி, அரக்கன் மேல் படை கொண்டு சென்று அவனை வென்று, அவனனத் தன் காலின் கீழ் போட்டு மிதித்து மாயக் கூத்தாடுகின்றார். இதனாலேயே இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமன் சோரநாட்டிய சர்மன் - மாயக் கூத்தன் என்று பெயர் பெற் றிருக்கிறான். சோரனிடமிருந்து பக்தரது மனைவியை மீட்டுக் கூத்தாடிய பெருமகனே சோர நாட்டியன் எனப் படுகிறான். இவனைப் பற்றிய துதி ஒன்று இத்துணை விவரத்தையும் கூறுகிறது.

ஸ்ரீ வேதசார மகிஷியும் அபக்ருத்ய நித்யாம்
ஸ்நாதுங்க தாம் திதி சுதேன
குகாப நீதாம். ஆனிய தூர்ண மதிசது
கருணா நிதி ஹிய ஹதம் சோர நாட்டியம்
அனிஷம் கானம் பிரயத்யே.

என்பதுதான் துதி. இந்த சோர நாட்டியன் என்னும் மாயக் கூத்தன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் பெருங்குளம் என்னும் திருக் குளந்தை. அது வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டில் ஒரு திருப்பதி, அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

பெருங்குளம் என்னும் திருக்குளந்தை, திருநெல் வேலிக்குக் கிழக்கே இருபத்தி ஐந்து மைல் தொலைவிலுள்ள சிறிய ஊர். இதற்கு ரயிலில் போவதானால் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இறங்கி கார் வைத்துக் கொண்டோ , பஸ் ஏறியோ, பத்துமைல் வடகிழக்காகப் போக வேணும். தூத்துக்குடியிலிருந்து இருபதுமைல் தெற்கே வந்தாலும் வரலாம். இந்த ஊரில் அதன்