பக்கம்:வேட்டை நாய்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேட்டை நாய்


ஆகையால், இந்த ஆட்டம் முடிந்த பிறகு நான் வருகிறேன். நீங்கள் முன்னால் செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன். விலாசத்தை மட்டும் கூறி விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

“தம்பி, என் பங்களா சுமார் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. நீ மட்டும் தனியாகவா வரப்போகிறாய்?” என்று கேட்டார், பிரபு,

“கவலைப்படாதீர்கள். நான் வந்து விடுவேன். ஊரிலிருந்தே நான் தனியாகத்தானே நடந்து வந்தேன்!” என்றான் ஸெதாந்தா.

“சரி, சீக்கிரம் வந்துவிடு” என்று கூறி, பிரபுவின் வீட்டு விலாசத்தைக் கொடுத்துவிட்டு அரசர் வண்டியை விடும்படி கூறினார். வண்டி நகர்ந்தது.

* * *

பிரபுவின் வீட்டில் ஒரே தடபுடலாக இருந்தது. பிரபுக்களும், அரசாங்க அதிகாரிகளும் வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்தனர். பிரபு எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்.

அரசர், அங்கிருந்த மிகவும் அழகான ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். வந்தவர்கள் ஒவ்வொருவராய் அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவரவர் இடத்தில் போய் அமர்ந்தனர்.

மணி ஆறு அடித்தது.

பிரபு அரசரின் அருகே வந்தார். “அரசே, எல்லோரும் வந்துவிட்டார்கள். விருந்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். தங்கள் அபிப்பிராயம்...” என்று இழுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/22&oldid=500576" இலிருந்து மீள்விக்கப்பட்டது