பக்கம்:வேத வித்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போற தில்லே. இந்த நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.' - கனபாடிகள் செளக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?' 'தினமும் உன்னை நினைச்சு கினைச்சு புலம்பிண் டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்.' "என் பேரா? எதுக்கு என் பேரை வெச்சிங்க?" "பாகீரதிதான் உன் பேரை வைக்கணும்னு ஆசைப்பட்டா. உன் பெட்டியைக் குடைஞ்சு திருக்குறள் புஸ்தகமும் பட்டு வேட்டியும் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட உனக்கு ஒரு தபால் கொண்டு வந்திருக்கேன். கவர்' கவரா? யார் எழுதியிருக்கா?" 'தெரியலே. ரிஷிகேசத்துலேந்து வந்திருக்கு உங்கப்பாவா இருக்குமோ?" அவசரம் அவசரமாய் இருவரும் கலியாண வீட்டுக்குப் போனார்கள். போனதும் கிட்டர் எடுத்துக் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தான் மூர்த்தி. அப்பாதான் எழுதியிருந்தார்: சிரஞ்சீவி மூர்த்திக்கு ஆசீர்வாதம். கூேடிமம். கூேடிமத்துக்கு எழுதவும். கனபாடிகளை ஈ | ன விசாரிச்சதா ச்ொல்லவும். கனபாடிகள் எனக்கு ஆப்த கண்ப்ர். உன் எதிர்க்ாலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கேன். அவரே உனக்கு ஏற்ற ப்ெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் கலியாணம் செய்து வைப்பார். அவர் சொல்படி கடந்துகொள். அம்மா சங்கிலியை ஒருபோதும் கழுத்தைவிட்டு எடுக்காதே. அந்தச் சங்கிலி ரூபமாய் உன் தாயார் உன்னை ஆசீர்வதிச்சிண்டிருப்பாள்.

99

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/101&oldid=1281635" இலிருந்து மீள்விக்கப்பட்டது