பக்கம்:வேத வித்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயேl' என்றான் மூர்த்தி. ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஒய்வா இருப்பார் சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்' என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா. பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?" 'இது ஆபீஸ்காராள் பக்தி இங்க வைதிகம் பார்க்க வேணாம்' என்றான் கிட்டா. 'எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணணும்னு கொள்ளை ஆசையா இருக்கு' தோன் வரமாட்டங்கறயே! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?" வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்.' "இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என் கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். தோன் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங் கறயே! சஞ்சலப்படறயேl rணசித்தம் கூடிணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறே நாளைக்கு வேணாங்கறே! முதல்ல மைைச திடப்படுத்திக்கோ... இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி'

எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார். 警繁

"என்ன எழுதியிருக்கார்?' ' 'அம்மா சங்கலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே கனபாடிகள் பேச்சைத் தட்டாதே'ன்னு முக்கியமா முனு விஷயம் எழுதியிருக்கார்." 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/107&oldid=918597" இலிருந்து மீள்விக்கப்பட்டது