பக்கம்:வேத வித்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5/Τεν நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே வெடிவெட”த்துக் கொண்டிருந்தது. தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான், வேதக் களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ் பிரம்மச்சரியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பால சங்கியாசி போல் அமைதியாக, அடக்கமாக, வாய் கமகம் முணுமுணுக்க, கடந்து கொண்டிருந்தான். அருகில், ஒரு குட்டையைப் பார்த்தபோது பழைய ஞாபகம் வர, அப்பாவின் குரல் அசரீரிபோல் ஒலித்து மெய்சிலிர்த்தான். மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. அப்பா பரசு தீட்சிதர் பேசுகிறார் : - . 'முர்த்தி! எனக்கு வயசாச்சுடா! உன் அம்மா போய் வருஷாப்திகமும் முடிந்து ஒரு வாரம் ஓடிப் போச்சு. இனி நீயும் நானும் இந்த கிராமத்திலே உட்கார்ந்துண்டு என்ன செய்யப் போறோம்? கிராமவாசம் சரி; சகவாசம் சரியில்லையே! நாளை காலை, புறப்படுவோம். சனி உஷஸ்! நாள் நட்சத்திரம்

9

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/11&oldid=1281547" இலிருந்து மீள்விக்கப்பட்டது