பக்கம்:வேத வித்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா! வெத்தலை' போடறது தப்பா?' என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா! 'நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!' என்றான் கிட்டா. தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது. மூர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான். "எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே' "சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை கடக்றது. இன்னைக்கு மஞ்சு புது "ஐட்டம்' பண்ணப்போறா நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்' என்றான் மூர்த்தி. 'நாலு மணிக்குள்ள் வந்துடு. டி.பன் காசி அல்வா, மெதுபக்கடா!...' என்றான் கிட்டா. "ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி. வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஒரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான். 'நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை. அம்மா சங்கிலி தப்பியது' என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான். கண் முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று கோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனை யையும் சாமர்த்தியத்தையும் வியந்தான். அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம் தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண்' 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/110&oldid=918605" இலிருந்து மீள்விக்கப்பட்டது