பக்கம்:வேத வித்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மத்தியானம் கொதிக்கிற வெயில்லே கடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு...' 'மாமா ஏதாவது ஆயிண்ட்மெண்ட்' வெச்சிருப்பார், வா, கேட்டுப் பார்க்கலாம்.' மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மர மாக இருந்தார். மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே கின்றான். 'மூர்த்தி வந் து ட் டான். வெயில்ல செருப்பில்லாம கடந்திருக்கான், கால் கொப்புளிச்சுட்டுதாம்' என்றான் கிட்டா. 'செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?' என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா. 'வசதி இல்லையே' என்றான் கிட்டன. "அதுக்கென்னடா வசதி கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!" என்றார். 'ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட் மெண்ட் இருக்கா, மாமா?" 'அதெல்லாம் ஒ ண் ணு ம் வேணாண் டா. துரங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு துரங்கச் சொல்லு, கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?" 'ஆல்பத்திரியில யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!' "யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ. ஏதாவது சாப்பிடச் சொல்லு, களைச்சாப்ல தெரியறான், பாவம்' “என்ன சாப்பிட்றே மூர்த்தி?' என்று கேட்டிான் கிட்டா. 'ஸ்நானம் பண்ணி சந்தியா வக்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன்' 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/119&oldid=918622" இலிருந்து மீள்விக்கப்பட்டது