பக்கம்:வேத வித்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணிரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான். பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான். ക്ലിക്ക് நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியி லிருந்து வந்து விட்டாள். ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்' என்று ஆஸ்பத்திரியில் கிபந்தனை போட் டிருந்தார்கள். மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான். 'தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?" என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு. 'எனக்கு உயிர் தந்தவளாச்சே நீ உன்னை மறப்பனாரி' என்றான் மூர்த்தி. LDT lor சிபாரிசின் பேரில் மூர்த்தியைத் தஞ்சாவூர் ஸப்தரிஷி வேத பாடசாலை'யில் சேர்த்துவிட்டு கலியாணம் முடிந்த மறுகாளே கிட்டா ஊருக்குப் புறப்பட்டு விட்டான். 'மாமா, மூர்த்தியை கவனிச்சுக்குங்க. ரொம்ப கல்லவன்' என்றான் கிட்டா. ', 'அவனைப் பத்தி எனக்கு நிறையவே தெரியும்டா. ே கவலைப்படாம போயிட்டு வா' என்றார் மாமா, - கிட்டாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. மாமாவுக்கு நிறையவே தெரியுமாமே! எப்படி?’ என்று யோசித்தான். 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/122&oldid=918630" இலிருந்து மீள்விக்கப்பட்டது