பக்கம்:வேத வித்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரைப் படித்துறையில் அமர்ந்து சற்று நேரம் புரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நீந்திக் குளிக்கவேண்டும்போல் ஆசை தோன்றியது. இத்தனை காலம் கிராமத்திலேயே வாழ்ந்திருந்தும் ச்ேசல் தெரிந்துகொள்ளாமல் போனேனே!" என்று வருத்தப்பட்டான். அதே படித்துறையில் கீழே கொஞ்சம் தள்ளி, அரை கிர்வாண கோலத்தில் யாரோ ஒரு பெண் குளித்துக் கொண் டிருந்தாள். அவளுடைய மேலாடை கரையிலிருந்த ஒரு புதர்மீது உலர்ந்து கொண்டிருந்தது. "பொழுதுகூடச் சரியாக விடியாத இந்த நேரத்தில் தனிமையில் இங்கே வந்து குளிக்கும் இந்தப் பெண் யார்?' அந்த இளமையும், இயற்கையான வசீகரமும், உடல் வனப்பும் மூர்த்தியை மயக்கத்தில் ஆழ்த்தின. - 'மோகினிப் பிசாசு என்று சொல்வார்களே, அதுவாக இருக்குமோ பிசாசுகள் குளிப்பதுண்டா?" சூரிய பகவானே! துஷ்டதேவதைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று' என்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே எழுந்து கின்றான். - - அச்சமயம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் மணி ஓசை கேட்கவே, அர்ச்சகர் வந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். சீக்கிரமே குளித்து, விநாயகரை வலம் வந்து, அர்ச்சகருக்கு புஷ்பங்கள் பறித்துக் கொடுத்துவிட்டு, பாட சாலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். - - * : "இன்னைக்கு துவாதசி. கனபாடிகள் எனக்காகக் காத் திருப்பார். - * , இத்தனை நேரம் ஸ்கானத்தை முடித்துவிட்டு பொன் வேய்ந்த ருத்ராட்ச மாலையும், கட்டுக்கட்டாய் விபூதியும், பீதாம்பரமும் அணிந்து சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். அடிநாபியிலிருந்து எழும் கம்பீரமான சங்கீதக் குரலில் அவர் மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்யும்போது பாடசாலை முழுதுமே தெய்விகக் களை வீசும். . . - -

11

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/13&oldid=1281549" இலிருந்து மீள்விக்கப்பட்டது