பக்கம்:வேத வித்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை மன்னிச்சடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால முடியாது' என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார். "அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?" என்று கொஞ்சம் கோபமாகவே குரல் கொடுத்தார் ஒருவர். 'அதான் சொல்லிட்டனே! நான் வாசிக்கப் போறதில்லை. முடிவாத்தான் சொல்றேன்." 'சரி, வாங்கய்யா போகலாம். அவர்தான் சொல்லிட்டாரே! அப்புறம் என்ன? அடுத்தாப்பல காம செய்ய வேண்டியதைச் செஞ்சுக்குவம்' என்றார் இன்னொருவர். 'வெய்யில் வேளையில வந்திருக்கீங்க, தாகத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்க' என்றார் கனபாடிகள் . 'உங்க வீட்ல இனி பச்சைத் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்: ஆமாம், நாங்க வரோம்' என்று அத்தனை பேரும் விறைப்பாகப் புறப்பட்டார்கள். 'விராட பர்வம் வாசிக்கறதுக்கு மட்டும் நான் வேணுமோ? ஊரார்னா இந்த பிராம்மணாள் மட்டும்தான் ஊராரா? குடியான வாளெல்லாம் வரலையே! அவாதானே பயிர் பண்றவா? அவாளும் சேர்ந்து வந்து கேட்டிருந்தா, கான் ஒத்துண்டிருப்பேன். எதுக்காக இந்த பிராம்மணாள் மட்டும் தனியா ஒதுங்கி வந்து கேட்கணும். இதல ஏதே உள்நோக்கம் இருக்கு' என்று சந்தேகப்பட்டார் கனபாடிகள். அன்புள்ள அத்தைக்கு. பின்கட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேனாவை உதறி அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் பாக ரத. திடீரென்று பாடசாலைப் பிள்ளைகள் அதோ மூர்த்தி வந்துட்டான்' என்று உற்சாகம் பொங்கக் கூவினர்ர்கள்! 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/137&oldid=918662" இலிருந்து மீள்விக்கப்பட்டது