பக்கம்:வேத வித்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 零 . . t |

  • - #

முர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள். 'இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்.' 'ஒகோ, அப்படிச் சொல்லு. அதனாலதான் வங் திருக்கேன் னு சொல்லு' என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி. 'அப்படித்தான் இருக்கட்டுமேl' என்றான் மூர்த்தி. "சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, அதையே சமைக்கச் சொல்றேன்' என்றாள். மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள். "கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்' என்றான் மூர்த்தி. 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/140&oldid=918670" இலிருந்து மீள்விக்கப்பட்டது