பக்கம்:வேத வித்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது' என்றாள். பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது! "சரி, அப்பாவுக்கு ரவாக் கஞ்சி. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, ராவ்ஜியை பண்ணச் சொல்றேன்" என்றாள் பாகீரதி. - 'எனக்குத் தனியா ஒண்ணும் வேணாம். பாடசாலைப் பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப காளாச்சு, அவா என்ன சாப்பிட்றாளோ அதுவே போதும் ' என்றான். - 'கி ட் ட ப் பா லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கார்னு சொன்னயே? என்ன எழுதியிருக்கார் தெரியுமா?" 'எனக்கெப்படி தெரியும்?" மூர்த்தி எ த ற் கு மே பிடிகொடுக்காமல் பேசியது பாகீரதிக்குச் சற்று எரிச்சலாயிருந்தது. "நீ ரொம்ப மாறிட்டே மூர்த்தி! நான் உன்னையே கினைச்சு நினைச்சு உருகிண்டிருக்கேன். யோனால் என்கிட்ட அக்கறை இல்லாம அலட்சியமாப் பேசிண்டிருக்கே. என் மனசை நீ புரிஞ்சுக்கலை. உன் மாதிரி என்னால உறவை வெட்டிக்க முடியலை. உனக்கு யாரோ சொக்குப் பொடி போட்டு கன்னா மயக்கி வெச்சிருக்கா. அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்தானே?" என்று அழ ஆரம்பித்து விட்டாள் பாகீரதி. "கனபாடிகள் எனக்காகக் காத்துண்டிருப்பார். நான் போறேன்' என்று சொல்லிவிட்டு நழுவினான் முர்த்தி. அன்றிரவு அழுக்கு கடிகாரத்தில் மணி பதினொன்று அடிக்கும் வரை கனபர்டிகள் பேசிக்கெர்ண்டேயிருந்தார். 'மூர்த்தி! நீ என்னை மறந்தாலும், யாரை மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கயே, அதை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன். வேதம்தான் நமக்கெல்லாம் வழிகாட்டி. அந்த ஒளி விளக்கை காம அணையவிடக் கூடாது. ரிஷிகள் 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/146&oldid=918681" இலிருந்து மீள்விக்கப்பட்டது