பக்கம்:வேத வித்து.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகளுக்குத் தூக்கம் வரும்வரை வீசிக்கொண் டிருந்துவிட்டு அப்புறம்தான் படுத்தான். பொ.த விடிந்ததும் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆற்றையும் கோவிலையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும் போல் ஆசையாக இருந்தது. "ஆற்றுக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே பூஜைக்கு ஜலம் கொண்டு வரட்டுமா? கிட்டாகூட ஊரில் இல்லையே!'என்று பாகீரதியிடம் கேட்டான். அவள் குடத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "அப்படியே தஞ்சாவூர் போயிடமாட்டயே!' என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தாள். அவன் ஆற்றங்கரை படித்துறையில் போய் கின்று பார்த்த போது அந்த இடம் பாலைவனமாய்க் காட்சி அளித்தது. பசுமை யெல்லாம் போய் காய்ந்து கிடந்த கரையோரப் புதர்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆற்றுக்கு நடுவே பெரிதாகப் பள்ளம் வெட்டி ஊற்றெடுத் திருந்தார்கள். அந்தத் தேக்கத்திலிருந்து ஓடிய வாய்க்கால் ஒரு பட்டத்தின் வால்போல் தெரிந்தது. இதே படித்துறையில் அன்று வெள்ளத்தில் சிக்கித் திணறியபோது தன்னைக் காப்பாற்றிய மஞ்சுவின் நினைவு தோன்ற 'பாவம் மஞ்சுவிடம் சரியாகக்கூடப் பேசாமல் வந்து விட்டேன். சர்க்கஸ் கம்பெனியில் சேரலாமா?’ என்று அவள் கேட்டபோது அலட்சியமாக 'அது உன் இஷ்டம்' என்று பதில் சொல்லிவிட்டு வந்து விட்டேன். ரத்தம் கொடுத்துவிட்டதால் நன்றிக்கடன் தீர்ந்து விட்டதாக நான் நினைத்தது எத்தனை அகம்பாவம் கழைக்கூத்தாடிப் பெண் தான் என்றாலும் அவளுக் குள்ள பண்பும் பெருந்தன்மையும் எனக்கு இல்லையே' என்று எண்ணித் தன்ைைனத்தானே நொந்து கொண்டான். சாவகாசமாகத் தண்ணிரில் உட்கார்ந்துகொண்டு கைகளால் அளையத் தொடங்கினான். பிறகு மல்லாந்து படுத்து அந்த வெதவெதப்பான குளுமையில் நீண்ட நேரம் அமிழ்ந்திகுந்த பின் 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/150&oldid=918692" இலிருந்து மீள்விக்கப்பட்டது